மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்

ஊட்டி: மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் நூற்றாண்டு பழைமை வாய்ந்த மலை ரயில் உலக பிரசித்தி பெற்றதாகும். யுனஸ்கோ அமைப்பு நீலகிரி மலைரயிலை பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இந்த மலை ரயிலில் பயணிக்க பிற மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஞாயிற்றுகிழமை காலை 11.25க்கு ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.  

Advertising
Advertising

இதேபோல் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சனி, ஞாயிற்றுகிழமைகளில் ஊட்டி-கேத்தி இடையே 3 முறை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இவற்றை சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்தி மகிழ்கின்றனர். இதுதவிர வாரநாட்களில் வழக்கம் போல் குறிப்பிட்ட நேரங்களில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாவது சீசன் களைகட்டியுள்ள நிலையில் ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் மலைரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டினார்கள். இதனால் சனிக்கிழமை முதல் நேற்று வரை மலைரயில்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடந்த 4 நாட்களில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மலைரயிலில் பயணித்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: