×

குற்றாலத்தில் வெயிலும்... இதமான சூழலும்... அருவிகளுக்கு ஓரளவு தண்ணீர் வரத்து

தென்காசி, குற்றாலத்தில் சில நாட்களாக மதியம் வரை வெயிலும், பிறகு இதமான சூழலும் நிலவி வருகிறது. சாரல் இல்லாத போதும் அருவிகளில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. குற்றாலத்தில் இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் சீசன் சுமாராக இருந்த நிலையில் ஆகஸ்ட் மாத சீசன் நன்றாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்துடன் சீசன் காலம் நிறைவடைந்த நிலையிலும், அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. அவ்வப்போது சாரலும் நன்றாக பெய்து வந்தது. கடந்த 4 நாட்களாக மதியம் வரை வெயிலும், அதன் பிறகு சற்று இதமான சூழலுமாக உள்ளது.

மாலையில் சிறிது மேகக்கூட்டம் திரண்டு ஒன்றிரண்டு தூறல்கள் விழுகிறது. சாரல் குறிப்பிடத்தக்க அளவில் இல்லாத நிலையிலும் அருவிகளில் ஓரளவு தண்ணீர் நன்றாக விழுகிறது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் தண்ணீர் நன்றாகவும், பெண்கள் பகுதியில் சுமாராகவும் விழுகிறது. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளில் ஓரளவு நன்றாகவும், ஒரு பிரிவில் குறைவாகவும் விழுகிறது. பழையகுற்றாலம், புலியருவி அகியவற்றில் தண்ணீர் சுமாராக விழுகிறது. சீசன் காலம் நிறைவடைந்து விட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக உள்ளது.

Tags : Courtallam ,
× RELATED மலைப்பகுதியில் தொடருது மழை: குற்றால அருவிகளில் கொட்டுது வெள்ளம்