×

குமரியில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

குலசேகரம், குமரி  மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மதியத்துக்கு மேல் இடி மின்னலுடன் மழை  பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு மாவட்டம் மற்றும் அணைகளின்  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மலையில்  இருந்து அணைகளுக்கு வரும் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகளவில் தண்ணீர் வருகிறது. குமரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து  வருவதால் முக்கிய ஆறுகளான கோதையாறு, பரளியாறு போன்றவற்றில்  நீர்வரத்து அதிகரித்து கரைபுரண்டு ஓடுகின்றன. கோதையாற்றில் நீர் வரத்து  அதிரித்துள்ளதால், திற்பரப்பு அருவியில் தண்ணீர்  ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதற்கிடையே நேற்று முன்தினம் மதியம் திற்பரப்பு,  குலசேகரம், பேச்சிப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி  நேரம் கனமழை ெவளுத்து வாங்கியது. தொடர்ந்து இரவு முழுவதும் சாரல் மழையாக  பெய்தது. நேற்று காலையிலும் சாரல் மழை தொடர்ந்தது. இதனால் திற்பரப்பு அருவி  கலங்கிய நிலையில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தற்போது தமிழகத்தில்  பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் மழை காரணமாக  திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிக குறைவாகவே  உள்ளது. அதுபோல மாத்தூர் தொட்டிப்பாலத்திலும் சுற்றுலா பயணிகள் அதிகம்  காணப்படவில்லை.

Tags : Kumari ,
× RELATED மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் கனமழை