கொட்டும் மழையிலும் கூட்டம் குறையவில்லை

கொடைக்கானல், கொடைக்கானலில் ெதாடர் மழை பெய்த போதும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொடர்மழை பெய்தது. சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் கொடைக்கானல் ஏரி முழு கொள்ளளவையும் எட்டியது. மேலும் தொடர் மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல், பியர் சோழா போன்ற அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொடைக்கானலில் தொடர் மழை இருந்த போதும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் குறையவில்லை. நேற்று காலையில் இருந்தே பெய்த சாரல் மழையில் நனைந்தபடி சுற்றுலாப்பயணிகள் குணா குகை, மோயர் பாயிண்ட், பில்லர் ராக், பைன் பாரஸ்ட் போன்ற பல்வேறு இடங்களை கண்டு ரசித்தனர். மேலும் குடை பிடித்தபடி ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

Advertising
Advertising

கும்பக்கரையில் குளிக்க தடை

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே 8 கிமீ தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் அருவி வறண்டு காணப்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் வரத்து குறைவாக இருந்தது. கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து துவங்கியது. தற்போது அருவியில் தண்ணீர் அதிகளவில் வருவதாலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Related Stories: