இரண்டாம் சீசனை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 15,000 தொட்டிகளில் மலர் அலங்காரம்

இரண்டாம் சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் 15,000 தொட்டிகளில் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. 85 வகையான 2.5 லட்சம் மலர் செடிகள் பூங்கா முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் ஆண்டுதோறும் இரண்டு சீசன் கடைபிடிக்கப்படுகிறது. மார்ச் இறுதி வாரம் முதல் ஜூன் முதல் வாரம் வரை முதல் சீசனாகவும், செப்டம்பர் துவங்கி நவம்பர் வரை 2வது  சீசனாகவும் கடைபிடிக்கப்படுகிறது. முதல் சீசனில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாக காணப்படும். மேலும், இந்த சீசனின் போது வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளை விட தமிழகத்தில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். 2வது சீசனில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். கடந்த 1ம் தேதி முதல் சீசன் துவங்கியுள்ளது.

Advertising
Advertising

இதற்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர்கள் செடிகளில், அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்த நிலையில் நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அலங்கார பணிகள் மேற்கொள்ளபட்டது. டேலியா, டெல்பீனியம், இன்காமேரிகோல்டு,பேன்சி, பிகோனியா, டெய்சி, காலண்டுலா, டையான்தஸ்,ஆஸ்டர் உட்பட 85 வகையான 2.5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. 15,000 தொட்டிகளில் மலர் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சி சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஒரு மாதம் இருக்கும். பொதுவாக, 2ம் சீசனின் போது , தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரம் மேற்கொள்ளப்படுவதில்லை. இந்த முறை தாவரவியல் பூங்காவில் உள்ள மடங்களில் மட்டுமின்றி, பெர்ன் அவுஸ்பூங்காவில் பல்வேறு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: