×

வால்பாறையில் குளுகுளு சீசன்: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

வால்பாறை:வால்பாறையில் குளு... குளு... சீசன் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.வால்பாறையில், கடந்த மூன்று மாதமாக தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்தது. இதனால், இங்குள்ள அணைகள் நிரம்பியதோடு, நீர்நிலைகளிலும் தண்ணீர்வரத்து அதிகரித்தது. எனவே, நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலாபயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக வால்பாறையில் பருவமழை ஓய்வெடுக்க துவங்கியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின், குளு... குளு... சீசன் நிலவுவதால், கேரளாவிலிருந்து வால்பாறைக்கு யானைகள் கூட்டம், கூட்டமாக வரத்துவங்கியுள்ளது.இதனிடையே, வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்து ரம்யமான சீதோஷ்ணநிலை நிலவுவதால், சுற்றுலாபயணிகள் வருகையும் வெகுவாக அதிகரித்துள்ளது. வால்பாறை வந்துள்ள சுற்றுலாபயணிகள், எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள யானை, காட்டுமாடு, சிங்கவால் குரங்குகளை, வெகுவாக கண்டு ரசிக்கின்றனர்.

Tags : Kallukulu Season ,Valparai ,
× RELATED கொரோனா இல்லாத கோவா; உள்ளூர் பயணிகள்...