×

கொடைக்கானலில் கிளைமேட் சூப்பர்: தொடர்மழையால் நிரம்பிய ஏரியில் ஜாலி படகு சவாரி

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில்  சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவு இருந்தது. தொடர்மழையால் நிரம்பிய ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மலைகளின் இளவரசி கொடைக்கானலில் வார இறுதி நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அங்கு கூடிய சுற்றுலா பயணிகள் கோக்கர்ஸ் வாக், தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளை முற்றுகையிட்டு, இயற்கை அழகை ரசித்தனர்.

கொடைக்கானலில் பெய்த தொடர் சாரல் மழையால் கொடைக்கானல் ஏரியில் நீர் நிரம்பியுள்ளது. இதனால் ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்த குறைந்த அளவிலான மலர்களை சுற்றுலாப்பயணிகள் ரசித்தனர். அவ்வப்போது சாரல் மழை பெய்தது. நகர் முழுவதும் மேகங்கள் சூழ்ந்து இருந்ததால் சுற்றுலாப்பயணிகள் விடுமுறையை கொண்டாட்டமாக அனுபவித்தனர்.

Tags : Climatic Super ,Kodaikanal ,Jolly boat ride ,lake ,
× RELATED கொடைக்கானலில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு