கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் 'செர்ரி பிளாசம்'

கொடைக்கானலில் இரண்டாம் சீசனை வரவேற்கும் விதமாக செர்ரி பிளாசம் மலர்கள் பூத்துள்ளன. கொடைக்கானலில் இரண்டாம் சீசனை வரவேற்கும் விதமாக செர்ரி பிளாசம் மலர்கள் தற்போது பூத்துள்ளன. இந்த பூ பூத்துள்ள மரங்களில் இலைகளே இருக்காது. மரம் முழுவதும் மலர்கள் மட்டுமே இருக்கும். இது பார்ப்பதற்கு மிக அழகாக ரோஸ் நிறத்தில் இருக்கும். இந்த செர்ரி பிளாசம் மலர்கள் கொடைக்கானல் மலைப் பகுதி முழுவதும் பூத்துள்ளது. இந்த பூக்கள் இந்தியாவில் உத்தரகாண்ட், மேற்குவங்கம், ஜம்மு-காஷ்மீர், சிக்கிம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் டார்ஜலிங், கோவில் நகரங்களான கல்பா, சரகான், சிடகுள் உள்ளிட்ட பகுதிகளிலும் பூக்கின்றன.

இந்தியில் இந்தப் பூவை பத்மஹஸ்தா என்று அழைக்கின்றனர். ஜப்பான் நாட்டில் இந்த மலர்கள் பூக்கும் காலங்களில் சிறப்பு விழா எடுத்து கொண்டாடுகின்றனர். இந்தப் பூ பூக்கும் மரங்களை உள்ளூர்வாசிகள் ரப்பர் மரங்கள் என்று கூறுகின்றனர். ரோசாசியா என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. கொடைக்கானல் முழுவதும் பூத்துள்ள இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் கூறுகையில், இந்த பூக்கள் பூக்கும் மரங்களை கொடைக்கானல் வனப்பகுதி மற்றும் நகர் பகுதிகளில் அதிகம் நடவேண்டும். இது பூக்கும் காலத்தில் நகர்ப் பகுதி மிகவும் அழகாக காட்சியளிக்கும். செர்ரி மலர்கள் பூக்கும் இந்த மாதத்தை செர்ரி பிளாசம் மலர்கள் விழாவாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED 40 நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் இன்று திறப்பு