குற்றாலத்தில் சாரலுடன் சீசன் அருமை: சுற்றுலா பயணிகள் 'குஷி'

தென்காசி -குற்றாலத்தில் சீசன் காலம் நிறைவடைந்த பிறகும் சாரல் நன்றாக உள்ளது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் ஜூன், ஜூலை மாதங்களில் சற்று சுமாராக இருந்தாலும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் நன்றாக இருந்தது. தற்போது சீசன் காலம் நிறைவடைந்த பிறகும் சாரல் உள்ளது. நேற்று பகலில் அவ்வப்போது சாரல் பெய்தது. இன்று காலையிலும் அது தொடர்ந்தது. வெயில் இல்லை. மெயினருவியில் ஆண், பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுவதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கூட்டம் குறைவாகவே உள்ளது.

Tags :
× RELATED 40 நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் இன்று திறப்பு