×

தண்ணீரின்றி வறண்ட மினி குற்றாலம்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே மினி குற்றாலம் என அழைக்கப்படும் அருவி, மழையில்லாததால் தண்ணீரின்றி வறண்டு பாறைகளாக காட்சியளிக்கிறது. இதனால் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குதொடர்ச்சி மலையில் அருவிகள், நீரோடைகள் ஏராளமாக உள்ளன. இங்கு மினி குற்றாலம் என அழைக்கப்படும் நீரருவி பிரபலம். குற்றாலத்தில் சீசன் இருக்கும்போது, மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள இந்த மினி குற்றால அருவியிலும் தண்ணீர் கொட்டும். இந்த அருவியை மினி குற்றால அருவி என இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.

ஆனால, குற்றாலத்தில் அருவியில் தற்போது தண்ணீர் கொட்டும் நிலையில், மினி குற்றால அருவி தண்ணீரின்றி பாறைகளாக காட்சியளிக்கின்றன. இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், குற்றாலத்தில் சீசன் ஆரம்பித்தவுடன் திருவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து அருவி, ஓடைகளில் தண்ணீர் செல்லும். ஆனால், இந்தாண்டு குற்றாலத்தில் பலத்த மழை பெய்து அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வரும் நிலையில், மினிக்குற்றாலத்தில் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. இதனால் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்தடன் செல்கின்றனர்.

Tags :
× RELATED மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!