தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை

சென்னை: தக்காளியை பதுக்கி விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறையின் மூலமாக செயல்பட்டு வரும், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலையேற்றத்தை கருத்தில் கொண்டு தக்காளியை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. 800 டன் ன தக்காளி வந்த நிலையில் தற்போது 300 டன்னாக குறைந்துள்ளது. இதனால், வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கூட்டுறவுத்துறையின் மூலம் சென்னையில் செயல்பட்டு வரும் 27 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 2 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் என மொத்தம் 60 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.68 முதல் விற்பனையாகிறது. வெளிச்சந்தையுடன் ஒப்பிடுகையில் ரூ.28 முதல் ரூ.32 வரை குறைவு.

The post தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: