குற்றாலத்தில் நீடிக்கும் குளு குளு சூழல் : சுற்றுலா பயணிகள் உற்சாகம்

தென்காசி: குற்றாலத்தில் நேற்று சாரல்  நன்றாக இருந்தது. பகல் முழுவதும் வெயில் இல்லை. குளு குளு சூழல் காரணமாக  சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். குற்றாலத்தில் ஆகஸ்ட்  மாத துவக்கத்தில் இருந்து சீசன் நன்றாக உள்ளது. அவ்வப்போது சாரல்  பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் அவ்வளவாக இல்லை. நேற்று  பகல் முழுவதும் வெயில் இன்றி வானம் மேகமூட்டத்துடன்  காணப்பட்டது. இடையிடையே சாரல் பெய்தது. இதமான தென்றல் காற்றும் வீசியது.  

மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து  விழுகிறது.  ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.  பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர்  நன்றாக விழுகிறது. விடுமுறை நாளான நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள்  கூட்டம் நன்றாக இருந்த நிலையில், நேற்று சுமாராக காணப்பட்டது. இதனால்  மெயினருவி தவிர மற்ற அருவிகள் அனைத்திலும்  வரிசையின்றி  குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் நிலவும் குளுகுளு சூழல்  சுற்றுலா பயணிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!