29ம்தேதி நடக்கிறது கீழாநிலைக்கோட்டை அரியநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

 

திருமயம், ஜூன்22: கீழாநிலைக்கோட்டை அரியநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் முழு வீச்சில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள தேவஸ்தான கோயில்களைச் சார்ந்த 84 ஊர் நாட்டார்கள் குலதெய்வமாக வழிபடும் கீழாநிலைக்கோட்டை அரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இது மாநிலத்தில் உள்ள கற்கோயில்களில் ஏழாவது பெரிய கோயிலாகும். இக்கோயிலில் ராஜகோபுரம், விமானம் உள்பட முழுவதும் புதிதாக கற்களால் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. இதனிடையே எதிர்வரும் 29ம் தேதி காலை 9.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோயில் முன்பாக யாகசாலை பூஜை நடக்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கும்பாபிஷேகத்தில் இந்நாள், முன்னாள் பல்வேறு துறையை சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதே சமயம் கும்பாபிஷேகத்தில் 40 முதல் 50 ஆயிரம் வரை பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது.

The post 29ம்தேதி நடக்கிறது கீழாநிலைக்கோட்டை அரியநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: