குரங்கு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த குரங்கு அருவிக்கு இன்று முதல் சுற்றுலா  பயணிகள் அனுமதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோவை  மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கனமழை  பெய்தது. இதனால் கடந்த 8ம்தேதி அதிகாலையில் குரங்கு அருவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன். அன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க  அனுமதியும் மறுக்கப்பட்டது. மழை குறைவால், குரங்கு அருவியில் நேற்று காலை  வெள்ளப்பெருக்கு குறைந்தது. நேற்றுடன்  தொடர்ந்து 14வது நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.  தற்போது, குரங்கு அருவியில் கொட்டும் தண்ணீரின் அளவு  குறைவாக  இருப்பதால், இன்று 21ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க  அனுமதிக்கப்படுவர் என  வனச்சரகர் காசிலிங்கம் தெரிவித்தார்.

Tags :
× RELATED மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!