ஆடுதுறையில் உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா

 

திருவிடைமருதூர் ஜூன் 10: திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. மருத்துவகுடி நாவக்குளக்கரையில் ராஜ்யசபா எம்பி அன்புமணி ராமதாஸ் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் இறகு பந்து உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ராமபிரசாத் வரவேற்றார். அன்புமணி ராமதாஸ் இறகுப்பந்து விளையாடி உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார்.

இதில், தமிழ்நாடு உழவர் பேரியக்க தலைவர் ஆலயமணி, பாமக மாவட்ட செயலாளர் ஜோதிராஜ், வார்டு கவுன்சிலர்கள் முத்துபீவி ஷாஜகான், மீனாட்சி முனுசாமி, செல்வராணி சிவக்குமார், சுகந்தி சுப்பிரமணியன், பரமேஸ்வரி சரவணகுமார், சாந்தி குமார், ஷமீம்நிஷா ஷாஜகான், கண்ணன், பாலதண்டாயுதம், மாலதி சிவக்கொழுந்து, குமார், திருபுவனம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி துணைத் தலைவர் கமலா சேகர் நன்றி கூறினார்.

The post ஆடுதுறையில் உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: