குத்தாலம் அரசு கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு

 

குத்தாலம்,ஜூன் 7: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024 கல்வியாண்டிற்கான பி.எஸ்.சி., கணிதம், கணினி அறிவியல், பி.காம் வணிகவியல், பி.ஏ தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம் நாளை (8ம்தேதி) மற்றும் நாளை மறுநாள் (9ம்தேதி) ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. எனவே இந்த பாடபிரிவுகளுக்கு சேர விரும்பும் பிளஸ்-2வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும்,சேர்க்கை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் கொண்டுவர வேண்டிய சான்றிதழ்கள் 10, 11, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுசான்றிதழ். சாதி சான்றிதழ். ஆதார், வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5, ஆகியவற்றின் அசல் மற்றும் 3 நகல்களுடன் கொண்டுவர வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு தேர்ந்து எடுக்கப்படும் மாணவர்கள் கலந்தாய்வு நாளன்று உரிய கட்டணம் ரூ.3350 செலுத்தி கல்லூரியில் சேர்க்கை பெற்றுக்கொள்ளலாம் என கல்லூரியின் முதல்வர் விஜயேந்திரன் தெரிவித்துள்ளார்.

The post குத்தாலம் அரசு கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு appeared first on Dinakaran.

Related Stories: