நிதி நெருக்கடியினால் நியூயார்க் ரூஸ்வெல்ட் ஓட்டலை குத்தகைக்கு விட்டது பாக். அரசு

லாகூர்: நிதி நெருக்கடியினால், பாகிஸ்தான் அரசு நியூயார்க்கில் உள்ள அதற்கு சொந்தமான ரூஸ்வெல்ட் ஓட்டலை 3 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பெயரிலான ஓட்டல் ரூஸ்வெல்ட்டை பாகிஸ்தான் அரசின் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் கடந்த 1979ம் ஆண்டு குத்தகைக்கு விட்டது. 20 ஆண்டுகளுக்கு பிறகு அதனை மீட்டது. இந்நிலையில், பாகிஸ்தானில் தற்போது நிலவி வரும் கடும் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, ரூஸ்வெல்ட் ஓட்டல் மீண்டும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

இது பற்றி பாகிஸ்தான் ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கவாஜா சாத் ரபீக் லாகூரில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இந்த ஒப்பந்தத்தின்படி, 1,250 அறைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அரசுக்கு ரூ.1817 கோடி வருவாய் கிடைக்கும். 3 ஆண்டு ஒப்பந்தம் முடிந்ததும், ஓட்டல் பாகிஸ்தான் அரசிடம் திரும்பி ஒப்படைக்கப்படும். இதற்கு ஆண்டுக்கு ரூ.206 கோடி செலவாகும். ஏற்கனவே ரூ.16.5 கோடி கடன் உள்ளது,” என்று தெரிவித்தார்.

* குரேஷியை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு
இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இருந்த போது, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சராக 2018-2022 வரை இருந்தவர் மக்மூத் குரேஷி. இவர் இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் துணை தலைவரும் ஆவார். இம்ரான் கான் கைது நடவடிக்கையின் போது கடந்த மாதம் 9 தேதி ஏற்பட்ட வன்முறை, கலவரம் தொடர்பாக இவர் கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டார். இவரது வழக்கை விசாரித்த நீதிபதி சவுதாரி அப்துல் அஜீஸ், ராவல்பிண்டி துணை ஆணையரின் உத்தரவு சட்ட விரோதமானது என்று ரத்து செய்ததுடன், உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டார். மேலும் குரேஷியிடம் பிரமாண பத்திரம் வழங்கும்படி கேட்டு கொண்டார்.

The post நிதி நெருக்கடியினால் நியூயார்க் ரூஸ்வெல்ட் ஓட்டலை குத்தகைக்கு விட்டது பாக். அரசு appeared first on Dinakaran.

Related Stories: