யமஹா ஆர்15 வி4 டார்க் நைட் எடிஷன்

யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம், ஒய்இசட்எப் ஆர்15 வி4 நைட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.82 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருப்பு வண்ணத்தில் உள்ள இந்த மோட்டார் சைக்கிளின் வீல்கள், முன்புற ஸ்போர்க் உள்ளிட்ட இடங்களில் தங்க நிற பூச்சு காணப்படுகிறது. ஏற்கெனவே உள்ள ரெட் எடிஷனை விட சுமார் ரூ.1,000 அதிகம்.

இன்ஜினில் மாற்றம் இல்லை. இதில் உள்ள 155 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு மோட்டார், அதிகபட்சமாக 18.1 பிஎச்பி பவரையும் 14.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லாம்ப், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், புளூடூத் இணைப்பு வசதி ஆகியவை இதில் உள்ளன. விரைவில் சந்தைக்கு வர உள்ள ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் 210க்கு இது போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post யமஹா ஆர்15 வி4 டார்க் நைட் எடிஷன் appeared first on Dinakaran.

Related Stories: