நாகப்பட்டினத்தில் சுற்றுச்சூழல் தின விழா

நாகப்பட்டினம்,ஜூன்6: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், பள்ளிக்கல்வித்துறை இணைந்து நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றுச்சூழல் தின விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை வகித்தார். பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை, மரக்கன்றுகள் மற்றும் துண்டு பிரசுரங்களை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.
மேலும் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி தலா ரூ.1 லட்சம் காசோலையும் வழங்கும். இதை தொடர்ந்து இந்த ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் நெகிழி பயன்பாட்டை குறைத்து மரக்கன்றுகளை நட்டு சுற்றுசூழலை பாதுகாத்தமைக்கு தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், திருப்புகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் ஆகியோருக்கு பசுமை சாம்பியன் விருது மற்றும் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத்தலைவர் செந்தில்குமார், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் தமிழ்ஒளி, முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, நாகூர், நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளர் நல சங்க செயலாளர் சித்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post நாகப்பட்டினத்தில் சுற்றுச்சூழல் தின விழா appeared first on Dinakaran.

Related Stories: