சுங்கச்சாவடியில் கார் தீப்பற்றி எரிந்தது: 5 பேர் உயிர் தப்பினர்

ஈரோடு: தூத்துக்குடி மாவட்டம் மணல்விளையை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மெட்டல் மார்ட் நடத்தி வருகிறார். நேற்று காலை ஊழியர்கள் 4 பேருடன் காரில் ஈரோடு சென்று கொண்டிருந்தார். விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. உடனடியாக 5 பேரும் காரில் இருந்து இறங்கி வெளியே ஓடினர். அடுத்த சில நிமிடத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. பெருந்துறை தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

The post சுங்கச்சாவடியில் கார் தீப்பற்றி எரிந்தது: 5 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: