பாரம்பரியத்தை மீட்டெடுத்து பழைய நிலைக்கு கல்வித்துறையை தலைநிமிர செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆசிரியர் சங்கங்கள் பாராட்டு

சென்னை: பாரம்பரியத்தை மீட்டெத்து பழைய நிலைக்கு கல்வித் துறையை தலைநிமிர செய்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு ஆசிரியர் சங்கங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.
தியாகராஜன் (மாநில தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்): அதிமுக ஆட்சியின்போது 2017 பள்ளிகளில் துறையின் உயர் பதவியான பள்ளி கல்வித்துறை இயக்குனர் பணியிடம் இருக்கும்போது, பள்ளிக் கல்வி ஆணையர் என்று ஒரு புதிய பதவி உருவாக்கி அதில் இந்திய ஆட்சி பணியை சேர்ந்த அதிகாரியை நியமனம் செய்தனர். அவ்வாறு நியமனம் செய்யும்போது ஆணையர் பணியிடத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றம் சார்பாக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தோம். அப்போதைய திமுக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினிடம் முறையீடு செய்யப்பட்டது.

ஆணையர் பணியிடத்தை நீக்கினால் அரசிற்கு ஏதோ இழுக்கு வந்து விடும் என்றால் நினைக்காமல் ஆசிரியர்கள் மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள முதலமைச்சர் எங்கள் கோரிக்கை ஏற்று ஆணையர் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு மிகுந்த அனுபவம் வாய்ந்த அறிவொளி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பணியில் ரத்து செய்து பள்ளிகளில் துறை இயக்குனர் பணியிடத்தை உருவாக்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கும் இந்த கோரிக்கையை தொடர்ந்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்ற பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கும் ஆசிரியர்கள் சார்பாகவும் மாணவர் சார்பாகவும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இரா.தாஸ் (பொதுச்செயலாளர்,தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி): தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரம்பரியத்தை மீட்டெத்து பழைய நிலைக்கு கல்வித் துறையை தலைநிமிர செய்துள்ளார். அதற்கு உறுதுணையாக பள்ளிக் கல்வி அமைச்சர் செயல்பட்டு மீண்டும் பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடத்தை வழங்கி இருப்பதற்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக எங்களது இயக்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரிடம் நேரடியாக பேசியுள்ளோம். இவ்வாறு கூறினர்.

The post பாரம்பரியத்தை மீட்டெடுத்து பழைய நிலைக்கு கல்வித்துறையை தலைநிமிர செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆசிரியர் சங்கங்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: