சீர்காழியில் இருந்து விருதுநகருக்கு 1000 டன் நெல் மூட்டைகள் ரயில் மூலம் அனுப்பி வைப்பு

சீர்காழி: சீர்காழியில் இருந்து விருதுநகருக்கு 1000 டன் நெல் மூட்டைகள் அரவைக்காக ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுகிறது. அந்த நெல் மூட்டைகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் சிற்றரசு ஆலோசனையின் பேரில் பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்த நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் சீர்காழி ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து 21 ரயில் பெட்டிகள் மூலம் 1000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் தொழிலாளர்கள் மூலம் விருதுநகருக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியில் தர கட்டுப்பாட்டு அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

The post சீர்காழியில் இருந்து விருதுநகருக்கு 1000 டன் நெல் மூட்டைகள் ரயில் மூலம் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: