×

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இதுவரையில் 5 முறை பல்வேறு விபத்துகளில் சிக்கியுள்ளது!!

புபனேஷ்வர் : ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று யஷ்வந்த்பூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 280-க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இதுவரையில் 5 முறை பல்வேறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

15 மார்ச் 2002 அன்று, நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கோவூர் பகுதியில் படுகுபாடு சாலை மேம்பாலத்தில் மதியம் 2:40 மணியளவில் ஹவுரா-சென்னை மத்தியில் இயங்கும் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் ஏழு பெட்டிகள் தடம் புரண்டதில் 100 பயணிகள் காயமடைந்தனர்.

13 பிப்ரவரி 2009 அன்று ஒரிசாவில் புவனேஸ்வரில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஜாஜ்பூர் கியோஞ்சர் சாலை அருகே, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த விபத்தில் ரயில் தடம் புரண்டதற்கான காரணம் தெரியவில்லை.

டிசம்பர் 30, 2012 அன்று ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதில் இரண்டு குட்டி யானைகள் உட்பட ஆறு யானைகள் கொல்லப்பட்டன.

14 ஜனவரி 2012 அன்று, லிங்கராஜ் ரயில் நிலையம் அருகே சென்னை-ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஜெனரல் கம்பார்ட்மென்ட்-ல் தீ விபத்து ஏற்பட்டது தீ விபத்து ஏற்பட்ட உடனே தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு 20 நிமிடங்களில் தீ கட்டுப்படுத்தப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

18 ஏப்ரல் 2015 அன்று, நிடதவோலு ஜங்ஷன் (Nidadavolu Junction) கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்தது. இதில் இரண்டு பெட்டிகள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை.

The post கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இதுவரையில் 5 முறை பல்வேறு விபத்துகளில் சிக்கியுள்ளது!! appeared first on Dinakaran.

Tags : Bhubaneshwar ,Yashwandpur ,
× RELATED ஒடிசாவில் அரச குடும்பத்தை சேர்ந்த 12 பேர் போட்டி