ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு வீடு ஜப்தி செய்யப்படுமா?.. லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் இன்று தீர்ப்பு

திருமலை: ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு தங்கி உள்ள வீடு ஜப்தி செய்யப்படுமா? என்று இன்று லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபுநாயுடு ஆட்சியில் இருக்கும்போது அமராவதி தலைநகர் மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் சார்பில் தலைநகருக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில், உள்புற சுற்றுசாலை அமைப்பதற்கான திட்ட வடிவமைப்பில் தொழிலதிபர் ரமேஷின் நிலத்தின் மதிப்பை கூட்டும் விதமாக வடிவமைக்கபட்டது.

இதற்கு பரிசாக கிருஷ்ணா நதிக்கரையோரம், ரமேஷ்க்கு சொந்தமான தனது வீட்டை, சந்திரபாபுநாயுடுவுக்கு ரமேஷ் கொடுத்ததாக ஆந்திர மாநில அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சந்திரபாபுநாயுடு வீட்டை ஜப்தி செய்ய அனுமதி கோரி ஏசிபி நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு மனு தாக்கல் செய்தது. அதன்படி குண்டூர் மாவட்டம் உண்டவள்ளியில் கிருஷ்ணா நதிக்கரை ஒட்டியுள்ள வீட்டை ஜப்தி செய்வது தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்தன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிந்துமாதவி இன்று தீர்ப்பை அறிவிக்க உள்ளார்.

The post ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு வீடு ஜப்தி செய்யப்படுமா?.. லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் இன்று தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: