நீர்வரத்து அதிகரிப்பால் பொங்கி வழியும் சுருளி அருவி!

கம்பம்: கம்பம் அருகே சுருளி அருவியில் போதிய நீர்வரத்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் உற்சாக குளியல் போட்டு மகிழ்கின்றனர். தேனி மாவட்டத்தின் தலைச்சிறந்த சுற்றுலா தலமாக சுருளி அருவி உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து செல்கின்றனர். அடந்த வனப்பகுதிகளின் வழியாக பல வகையான மூலிகைகளில் பட்டு வரும் அருவி நீரில் குளித்தால் பல நோய்கள் குணமாகும் என்று நம்பப்படுவதால் இங்கு வரும் அனைவரும் அருவியில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மேலும் இங்கு ஆண்டு தோறும் சித்திரை முதல் தேதி, வைகாசி விசாகம், ஆடி அமாவாசை, மஹா சிவராத்திரி, தை அமாவாசை, பங்குனி உத்திரம் உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் இங்குள்ள பூத நாராயணன், சுருளி வேலப்பர், கைலாய நாதர் குகை, ஆதி அண்ணாமலையார் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளும் நடைபெறும். இந்த நிலையில் தற்போது அருவியில் போதிய நீர்வரத்து உள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் புனித நீராடி மகிழ்கின்றனர்.

Related Stories:

>