ஆன்மிகம் பிட்ஸ்: மண்டோதரி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தியாகேசர் தீபங்கள்: தியாகேசர் சந்நதியில் மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் இருந்து காலத்தின் நாயகனை பெருமானை வழிப்பட்டு கொண்டிருக்கின்றன. நவக்கிரகங்கள் அடங்கி ஒரே வரிசையில் உள்ளன.

காஞ்சி மறை நூபுரம்: வேதசிலம்பு: இங்கு யுகம் முடிவில் வேதங்கள் வழிபட்டு, சிவனுக்கு கால் சிலம்பாயின. பிரம்ம தேவனுக்கு சிவன் தூக்கிய காலை அசைத்து ஒலிமூலம் வேதங்களை உபதேசித்த தலம்.

கருவறையில் ஜன்னல்: பெண்ணாகடம், காஞ்சி ஜுரஹரரேஸ்வரர் கருவறைகோட்டங்களில் ஜன்னல்கள் உள்ளன. நாற்புறமும் இருந்தும் பெருமானை தரிசனம் செய்யலாம்.

ருத்திரர்கள்: சிவபுராணம், உலகப் படைப்பிற்கு உதவியாக இருக்கும் பொருட்டு பிரம்மனின் நெற்றியில் இருந்து சிவன் பதினோரு ருத்திரர்களை
படைத்தார்.

காப்பும் கங்கணமும்: காப்பு, தான் மேற்கொள்ளும் செயலுக்கு தீய சக்திகளால் உண்டாகும் தொல்லைகளை விலக்க அணிவது. கங்கணம், நாம் எடுக்கும் செயலில் நிலைத்து நின்று அதனை சிறப்புற செய்து முடிக்க மேற்கொள்ளும் உறுதிக்காக.

மண்டோதரி: இராவணன் மனைவி ஓயாது ஐந்தெழுத்தை ஓதும் மகாசிவபக்தி உடையவள். தாம் எப்போது விரும்புகின்றாளோ அப்போது ஈசன் தனக்கு காட்சி அளிக்க வரம் பெற்றிருந்தாள்.

ஒன்றுக்குமேற்பட்ட தலமரம்: இன்னம்பர்-2, ஒற்றியூர்-3, வேதாரண்யம்-12, திருக்கடவூர்-2, திருவெண்காடு-3, வைத்தீஸ்வரன் கோயில்-4, திருபுனவாயில்-4, பஞ்சவடி-5, ஸ்ரீசைலம்-6, நீலகுடி-6.

இடைக்கட்டுகோபுரம்: மதுரை, நெல்லை அம்பிகை ஆலயமும் சுவாமி ஆலயமும் அடுத்தடுத்து தனித்தனி சுற்று பிரகாரங்களுடன் தனிதனி வாயில்களுடன் வாயில் மீது பெரிய ராஜகோபுரம்
இருப்பது.

மரமும் தெய்வமும்: அரசமரமும் மும்மூர்த்தி வடிவம் விநாயகரோடு தொடர்புடையது. ஆலமரம் சிவன் வடிவம்; பொதுவுடையார் கோயிலில் ஆலமரமே நடராஜராக வழிபாடு. வேம்பு – பராசக்தி வடிவம். வேங்க, கடம்பு – முருகன் வடிவம்.

பாண்டி கொடுமுடி: அகத்தியர் தழுவி மகிழ்ந்த விரல் அடையாளம் லிங்க திருமேனியில் உள்ளன. இங்கு சிவன் உமா, திருமண காட்சி அகத்தியருக்கு காட்டினார்.

செடியின் பெயரில் ஊர்: கச்சி நெறிக்காரைக்காடு, காரைக்காட்டில் இந்திரன் தவம் செய்தபோது சுயம்பு லிங்கமாக ஈசன் தோன்றி அருள்புரிதல். சத்யவிரதநாதர் என்பர். இதேபோல் காரைக்கால், காரைக்குடி, காரைசெடியின் பெயரால் உண்டான ஊர்.

பிரம்மஹத்தி: பிரம்மத்தை உணர்ந்து பரமஞானிகளாக விளங்கும் பெரியோர்களை அவமதித்து, அவர்களை துன்புறுத்தி கொன்றுவிட்டால், கொன்றவர்களை கொடிய அரக்கன்வடிவில் அவர்களை துன்பம் பிடித்து தொடர்ந்து வந்து துன்புறுத்தும்.

பேரூர் (கோவை): திருமாலும் பிரம்மனும் முறையே பட்டிமுனி, கோமுனி பெயரில் தவம் செய்து சிவன் நடனகாட்சி காண்கிறார்கள் (கோமுனி-பசுமுகம்-பிரமன்).

ஆரூர்: மகாலட்சுமி, தவம் செய்து திருமாலை மணந்து லட்சுமீசர், உமை சிவனை வழிபட்டு பார்வதீஸ்வரர் பெயரில் லிங்கம் அமைத்து, சரஸ்வதி பிரம்மனை அடைந்து சரஸ்வதீஸ்வரர் பெயரில் லிங்கம் உள்ளன.

திரையில் பீமருத்திரர்: திருமால் வாமன அவதாரம் செய்து, சிவ பக்தனான மகாபலியை பாதாளம் அழுத்திய பாவம் தீர, லிங்கம் அமைத்து பூஜையும், அதை காக்க முன்புறம் திரையில் பீமசங்கரராக உருவம் அமைந்து உள்ளது.

நாகூர்: 1 நாரை கொண்டு வந்துவிட்ட புன்னை கொட்டையிலிருந்து 7 நாழிகை அளவில் பெரிய புன்னைமரம் தோன்றி அதன்கீழ் சிவலிங்கமாக தோன்றி அதை நாகர்கள் வழிபட்டதால் நாகநாதர் எனப்பட்டார். அம்பிகை நாகவல்லி.

மதில் சிறப்பு பெயர்: மதுரை, 1 மதில் காபாலி, திருவண்ணாமலை – வீரராகவன் திருமதில் வாணதிராயன் திருமதில், ஏகம்பமுடையான் திருமதில்

தொகுப்பு: அருள்ஜோதி

The post ஆன்மிகம் பிட்ஸ்: மண்டோதரி appeared first on Dinakaran.

Related Stories: