சேவல் கொண்டை மலர்கள் பூக்கும் சீசன் துவக்கம் : சுற்றுலா பயணிகள் வியப்பு

ஊட்டி : சுற்றுலா பயணிகளை கவரும் சேவல் கொண்டை மலர்கள் நீலகிரியில் பல இடங்களில் பூத்துள்ளதால், சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்து செல்கின்றனர். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கவும், மகிழ்விக்கவும் பூங்காக்களில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அலங்காரங்களும் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலனவர்கள் இயற்கை அழகை காணவே விருப்பப்படுகின்றனர். தற்போது கீழ்கோத்தகிரி, எப்பநாடு மலைச்சரிவுகள் மற்றும் கல்லட்டி சோலாடா பகுதிகளில் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளது.

Advertising
Advertising

இதனை காண நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது நீலகிரி மாவட்டத்தில் சேவல் கொண்டை மலர்கள் பூக்கும் சீசன் என்பதால், சாலையோரங்களில், பூங்காக்களில் வைக்கப்பட்டுள்ள இந்த மரங்களில் சிவப்பு நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகிறது. பூக்கள் பூத்து மரம் முழுக்க சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இந்த மரங்களில் இருந்து சாலைகளில் விழும் மலர்களும் அழகாக காட்சியளிக்கிறது. தற்போது ஊட்டி அருகேயுள்ள இடுஹட்டி செல்லும் சாலையில் பூத்துள்ள இந்த மலர்களை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

Related Stories: