குஜராத்தில் தரமற்ற மேம்பாலம் தனியார் கட்டுமான நிறுவன இயக்குநர்கள் 4 பேர் கைது

அகமதாபாத்: குஜராத்தில் மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலம் கடந்தாண்டு அக்டோபரில் அறுந்து விழுந்தது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்யும்படி குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஆய்வில் அகமதாபாத்தின் ஹட்கேஷ்வர் பகுதியில் ₹44 கோடி செலவில், அஜய் இன்ஜீனியரிக் கட்டுமான நிறுவனம் 2017ம் ஆண்டில் கட்டிய சத்ரபதி சிவாஜி மகராஜ் மேம்பாலம் 5 ஆண்டுகளில் மிகவும் சேதமடைந்து மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத ஆபத்தான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நிபுணர்கள் குழு மேற்கொண்ட ஆய்வில் அந்த பால கட்டுமானத்தின் போது தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஷிக் படேல், ரமேஷ் படேல், சிராக் படேல், கப்லேஷ் படேல் ஆகிய 4 இயக்குநர்களையும் கோக்ரா போலீசார் கைது செய்தனர்.

The post குஜராத்தில் தரமற்ற மேம்பாலம் தனியார் கட்டுமான நிறுவன இயக்குநர்கள் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: