×

நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தை குடியரசு தலைவர் திறக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!!

டெல்லி: நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தை குடியரசு தலைவர் திறக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 20 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என்றும் அறிவித்துள்ளன. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வைத்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக வழக்கறிஞர் ஜெயசுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்திய அரசியல் சட்டப்பிரிவு 79ன் படி, நாடாளுமன்றதின் இரு அவைகளையும், அதாவது மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றை உடனடியாக கூட்டவோ அல்லது கலைக்கவோ அதற்கான முழு அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு தான் உள்ளது என்றும் எனவே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறப்பது தொடர்பாக மக்களவை செயலகத்திற்கு வழிகாட்டுதல் அல்லது ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 18ம் தேதி மக்களவை செயலக பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில், திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு கூட கொடுக்கப்படவில்லை என்றும் இதன் மூலம் மக்களவை செயலகம் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயலில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

The post நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தை குடியரசு தலைவர் திறக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : President of the Republic ,Parliament ,Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை...