×

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறையில் இளைஞர் உயிரிழப்பு; பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு..!!

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்தில் அண்மையில் மெய்தி இன மக்களின் பழங்குடியின அந்தஸ்து கோரிக்கைக்கு எதிராக பிற பழங்குடியின மாணவர் அமைப்பினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் 70 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்தனர். சில நாட்கள் அமைதி திரும்பிய நிலையில், மணிப்பூரில் கிழக்கு மாவட்டமான நியுசெகோனில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

2 பேர் காயமடைந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. தங்சலம், அவரது மகன் உள்ளிட்ட 4 பேர் கடைகளை அடைக்குமாறு வணிகர்களை மிரட்டியதே வன்முறையின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் நிலைமை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறையில் இளைஞர் உயிரிழப்பு; பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,BJP ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் மீண்டும் வன்முறை;பா.ஜ அமைச்சர் வீடு உடைப்பு