காலிங்கராயன்பாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க தமாகா சார்பில் கலெக்டரிடம் மனு

 

ஈரோடு, மே 23: ஈரோடு ஊராட்சி ஒன்றியம், மேட்டுநாசுவம்பாளையம் கிராமம், காலிங்கராயன்பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என தமாகா ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் நேற்று கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளிக்கப்பட்டது. கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
மேட்டுநாசுவம்பாளையம் கிராமம், காலிங்கராயன்பாளையத்தில், 18,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். காலிங்கராயன்பாளையத்தை சுற்றி எலவமலை, அணைநாசுவம்பாளையம் போன்ற பகுதிகளில் 15,000 பேர் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் 5 ஆரம்ப பள்ளிகள், 1 நடுநிலைப்பள்ளி செயல்படுகின்றன. இங்கு 6,000 குழந்தைகள் படிக்கின்றனர். ஆனால் இப்பகுதியில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. இங்கு ஏற்கனவே செயல்பட்ட அம்மா மினி கிளினிக்கும் அகற்றப்பட்டுவிட்டது. எனவே, இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக அமைத்து, போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க தேவையான இடவசதி உள்ளது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post காலிங்கராயன்பாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க தமாகா சார்பில் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: