மறுபயன்பாடு மறுசுழற்சி மையம் அமைப்பு

 

நாமக்கல், மே 22: நாமக்கல் பஸ் நிலையத்தில் கழிவுகளை குறைக்கும் வகையில், மறுபயன்பாடு மறுசுழற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தால், எனது வாழ்க்கை எனது தூய்மையான நகரம் என்ற தலைப்பின் விழிப்புணர்வு இயக்கம், நாமக்கல் நகராட்சியில் நடத்தப்படுகிறது. அதன்படி, பொதுமக்கள் தங்கள் உபயோகப்படுத்திய மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிகள், புத்தகங்கள், பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை சேமிக்கவும் மீண்டும் அவற்றை மறு பயன்பாட்டிற்கு வழங்கவும் சேகரிப்பு மையம் துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சி 27வது வார்டு, பஸ் நிலையத்தில் கழிவுகளை குறைத்தல் மறுபயன்பாடு மறுசுழற்சி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இம்மையத்தை நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி துவக்கி வைத்தார். பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் உபயோகப்படுத்திய மீண்டும் பயன்படுத்திய துணிகள், காலணிகள், புத்தகங்கள், பொம்மைகள் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை 39 வார்டுகளில் உள்ள மையங்களில் வைக்கவும், தேவைப்படுவோர் அவற்றை எடுத்துக் கொள்ளவும் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சென்னு கிருஷ்ணன், பொறியாளர் சுகுமார், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் பழனிசாமி, பாஸ்கர், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

The post மறுபயன்பாடு மறுசுழற்சி மையம் அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: