×

சாரல் களைகட்டிய நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் தாராளம் : சுற்றுலா பயணிகள் அலைமோதல்

தென்காசி:  குற்றாலத்தில் விடுமுறை தினமான நேற்று  சாரல் களைகட்டியதோடு அருவிகளில் தண்ணீர் தாராளமாக கொட்டியது. இதனால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் அருமையாக உள்ளது. பெரும்பாலான நாட்கள் சாரல் பெய்துள்ளதோடு கடந்த சில தினங்களுக்கு முன்னர்வரை தொடர்ச்சியாக 3 தினங்கள் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது.

நேற்று மதியம் லேசான வெயில் காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு சாரல் களைகட்டியது. மெயினருவியில் தண்ணீர் தாராளமாகக் கொட்டியது. இதே போல் ஐந்தருவியில் 5 பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. விடுமுறை தினம் என்பதால் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் அருவிகளில் குளிக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக அதிக அளவில் வந்திருந்த பெண்கள், ெமயினருவி மற்றும் ஐந்தருவிகளில் நீண்ட வரிசையில் நின்று குளித்து சென்றனர்.

Tags :
× RELATED மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!