குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அலைமோதல் : நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்

தென்காசி : விடுமுறை தினமான நேற்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம்  அலைமோதியது. மெயினருவி, ஐந்தருவிகளில் நீண்ட வரிசையில்  காத்திருந்து குளித்தனர். குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் அருமையாக உள்ளது. இருப்பினும் கடந்த சில தினங்களாக சாரல் மாயமானது. சாரல் இல்லாத போதும் அருவிகளில் தண்ணீர் ஓரளவுக்கு நன்றாக விழுகிறது. நேற்று மதியம் வரை வெயில் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு சற்று இதமான சூழல் நிலவியது. அத்துடன் மனதுக்கு இதமான குளு குளு தென்றல் காற்றும் வீசியது.

மெயினருவியில் ஆண்கள் பகுதியில் ஓரளவு நன்றாகவும், பெண்கள் பகுதியில் சுமாராகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளில் ஓரளவு நன்றாக தண்ணீர் விழுகிறது. பழைய குற்றாலம், புலியருவி,  சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் ஓரளவு நன்றாக விழுகிறது. நேற்று விடுமுறை தினம் (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அலைமோதினர். குறிப்பாக  பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.  இதன் காரணமாக மெயினருவி, ஐந்தருவிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.

Related Stories: