குற்றாலத்தில் குவியுது கூட்டம் சீசன் ஜோர்

தென்காசி, ஜூன் 21: குற்றாலத்தில் சீசன் அபாரமாக உள்ளது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குற்றாலத்தில் கடந்த ஒரு மாதமாக சீசன் நன்றாக உள்ளது. தொடர்ந்து சாரல் பெய்து வருகிறது. நேற்று பகல் முழுவதும் வெயில் இல்லை. இடையிடையே மெல்லிய சாரலும் பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சீசன் அபாரமாக இருந்தது.

Advertising
Advertising

மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.  பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுவதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குற்றால சீசன் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தாண்டு அருமையாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Related Stories: