விடுமுறையை கொண்டாட பவானிசாகர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சத்தியமங்கலம்: கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக சுற்றுலாப்பயணிகள் பவானிசாகர் அணைப்பூங்காவை பார்வையிட ஆர்வம் காட்டினர். பவானிசாகர் அணையை ஒட்டி 15 ஏக்கர் பரப்பளவில் அணைப்பூங்கா உள்ளது. பூங்காவில் படகு வசதி, சிறுவர் மற்றும் பெரியவர்கள் சறுக்கி விளையாடுவதற்கும், ஊஞ்சல், செயற்கை நீரூற்று மற்றும் அழகிய கூடாரங்கள் உள்ளன. இதனால் விடுமுறைக்காலங்களில் அதிக அளவில் பயணிகள் வருவது வழக்கம்.

தற்போது பள்ளி தொடர்விடுமுறை விடப்பட்டதால் பொதுமக்கள் பூங்காவிற்கு கூட்டம் கூட்டமாக வந்தனர். ஈரோடு மட்டுமின்றி, கோவை, திருப்பூர், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களிலிருந்தும் அதிக அளவில் பயணிகள் வந்திருந்தனர். நுழைவுக்கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.5 ம், படகில் பயணிக்க நபர் ஒருவருக்கு ரூ.10 ம் விளையாட்டு சாதனங்கள் பயன்படுத்த ரூ.20 முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அணைப்பூங்காவில் உள்ள படகில் குடும்பத்துடன் பயணம் செய்ய சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். சிறுவர் மற்றும் சிறுமியர் சறுக்கு மற்றும் ஊஞ்சல்களில் விளையாடி மகிழ்ந்தனர்.

Related Stories: