கோடை விடுமுறையை முன்னிட்டு வைகை அணையில் குவியும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

ஆண்டிபட்டி: கோடை விடுமுறையையொட்டி ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
Advertising
Advertising

இதனால் வழக்கத்தை விட வைகை அணையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது. சிறுவர்களும், குழந்தைகளும் ஊஞ்சல் ஆடியும், யானை சிலையின் தும்பிக்கையில் சறுக்கியும் விளையாடி மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மாதிரி ரயில் வண்டியில் ஏறிச் சுற்றி வந்தனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில்,  தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான வைகை அணையில் குழந்தைகளோடு சுற்றிப் பார்க்க வந்துள்ளோம். இங்குள்ள பூங்கா பகுதியில் புல்வெளிகள், செடிகள் கருகியுள்ளன. இவற்றை நீருற்றி பராமரித்தால் பூங்கா அழகு பெறும். மேலும் பெரும்பாலான மின்விளக்குகள் உடைந்து கிடக்கின்றன. செயற்கை நீருற்று செயல்படாமல் உள்ளன. இவற்றை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால், சுற்றுலா வருபவர்களைக் கவரும் என்று கூறினர்.

Related Stories: