சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்

குன்னூர்: மழை மாவட்டமான  நீலகிரியில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஆஸ்திரேலியா  நாட்டிலிருந்து ஜெகரண்டா மலர்செடிகள் கொண்டு வரப்பட்டு ஊட்டி செல்லும்  சாலையோரம் மற்றும் பங்களா, காட்டேஜூகள் உள்ளிட்ட பகுதிகளில் நடவு  செய்யப்பட்டன. இவை அனைத்தும் தற்போது மரங்களாக வளர்ந்துள்ளன.  ஆண்டுதோறும் மார்ச் முதல் மே 2வது வாரம்வரை இம்மரங்களின் இலைகள் முற்றிலும்  உதிர்ந்து ஊதா நிறத்தில் மலர்கள் மட்டும் பூத்து குலுங்கும் தற்போது இந்த  வரை மரங்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக  அமைகிறது.

தேயிலை தோட்டப்பகுதிகளில் இம்மரங்கள் அதிகளவில் இருப்பதால்  இதமான சீதோஷ்ண நிலையும் நீடித்து வருகிறது. இதை போல இம்மர பூக்களில்  இருந்து தேனை ருசிப்பதற்காக தேனீக்கள் அதிகளவில் மரத்தை சுற்றி வருகின்றன.  இதமான மழை காற்றுக்கு உதிரும் பூக்கள் ஊதா நிற கம்பளம் விரித்தது போல  காட்சி அளிக்கிறது.

Related Stories: