மலைப்பகுதியில் மழை சுருளி அருவிக்கு வந்தது ஊற்றுநீர்

கம்பம்: ஹைவேவிஸ் மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்ததால் சுருளி அருவிக்கு ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுநீர் வரத்து தொடங்கியது. தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இது சுற்றுலாத் தலமாகவும், புண்ணிய தலமாகவும் விளங்குவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் நாள்தோறும் சுருளி அருவிக்கு வந்து செல்கின்றனர். ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் அணையிலிருந்து வரும் தண்ணீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளி அருவிக்கு வருகிறது.

கடந்த சில மாதங்களாக மழையில்லாத காரணத்தால் தூவானம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால் சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதியில் மழை பெய்ததன் காரணமாக ஊத்துத்தண்ணீர் சுருளி அருவிக்கு வரத்தொடங்கி உள்ளது. இதனால் சுருளி அருவிக்கு சுற்றுலாப்பயணிகளும், பக்தர்களும் அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளனர்.

Related Stories: