பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழும் பக்தர்கள்

உடுமலை: உடுமலை  அருகே உள்ள திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி மற்றும் அமணலிங்கேஸ்வரர்  கோயில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இங்கு பக்தர்கள் அதிகளவில்  வருகின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகமாக  இருக்கும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளித்து  மகிழ்கின்றனர்.

தற்போது உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கோயில்  திருவிழாக்கள் நடைபெறுவதால், அங்கு வரும் பக்தர்கள் பஞ்சலிங்க அருவிக்கு  வருகின்றனர். இங்கிருந்து பல்வேறு கோயில்களுக்கு தீர்த்தம் எடுத்து  செல்கின்றனர். பஞ்சலிங்க அருவியில் தற்போது மிதமான அளவு தண்ணீர்  கொட்டுகிறது. இதில் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து  செல்கின்றனர்.

Related Stories: