ஊட்டி - மஞ்சூர் சாலையோரம் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: சங்க கால இலக்கியங்களில் இடம் பெற்ற குறிஞ்சி மலர், நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது பூத்து குலுங்கும். இது மலர் அரிய வகை மலராகவும் கருதப்படுக்கிறது. இந்த மலர்கள் பொதுவாக மலைகள் மற்றும் சரிவுகளில் அதிகளவு வளரக்கூடியது. சில சமயங்களில் மலை முழுவதும் பூத்து குலுங்கும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை முதல் 36 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பல வகையான குறிஞ்சி மலர்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அவ்வப்போது 30 வகையான குறிஞ்சி மலர்கள் பூக்கின்றன.

Advertising
Advertising

இந்த மலர்கள் மலை சரிவு முழுவதும் பூப்பதால், தொலைவில் இருந்து பார்க்கும் போது அந்த மலையே நீல நிற கம்பளம் விரித்தார் போல் காட்சியளிக்கும். ஆனால், இது போன்ற நிகழ்வு எப்போதாவது மட்டுமே காணப்படும். ஆனால், சில சமயங்களில் ஆங்காங்கே பூத்துக் காணப்படும். அதேசமயம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. தற்போது, இவ்வகை குறிஞ்சி மலர்கள்  நீலகிரி மாவட்டம் ஊட்டி - மஞ்சூர் சாலையில் குந்தா மற்றும் மெரிலேண்ட் மலை சரிவுகளில் பூத்துள்ளன. சாலையோரங்களிலேயே அதிகளவு பூத்துள்ள இம்மலர்களை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கண்டு ரசித்து செல்கின்றனர். அதன் அருகே நின்று புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.

Related Stories: