சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டிய கன்னியாகுமரி

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நேற்று வடமாநில சுற்றுலா பயணிகள் மற்றும் செவ்வாடை பக்தர்கள் குவிந்ததால் களைகட்டியது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடந்த வாரம் தான் ஐயப்ப பக்தர்கள் சீசன் முடிவடைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் வார விடுமுறை தினமான நேற்று வடமாநில சுற்றுலா பயணிகள் மற்றும் செவ்வாடை பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் கன்னியாகுமரிக்கு வருகைதந்தனர். இவர்கள் முதலில் கடலில் புனித நீராடிவிட்டு பகவதியம்மனை தரிசனம் செய்தனர்.

Advertising
Advertising

தொடர்ந்து கடல்நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு பூம்புகார் படகில் சென்று பார்வையிட்டனர்.  முன்னதாக நீண்ட வரிசையில் காத்து நின்று டிக்கெட் எடுத்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காரணமாக சன்னதி தெரு, திரிவேணி சங்கமம் கடற்கரை, கடற்கரைசாலை உள்ளிட்ட இடங்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கடைகளில் வியாபாரம் களைகட்டியது.

Related Stories: