ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பென்னாகரம் : விடுமுறை தினமான நேற்று, குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகளால் ஒகேனக்கல் களை கட்டியது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். விடுமுறை தினமான ேநற்று, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மெயினருவியில் கொட்டிய தண்ணீரில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்த அவர்கள், பரிசலில் பயணம் செய்து காவிரியின் அழகையும், தொங்கும் பாலத்தில் இருந்து நீர் வீழ்ச்சியின் அழகையும், முதலை பண்ணை உள்ளிட்ட இடங்களையும் கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் பரிசல் ஓட்டிகள், மீன் பிடிப்பவர்கள், சமையல் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கூட்டம் அலைமோதியதால், ஒகேனக்கல் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: