பெரியார் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள் தடுப்பு வேலி இல்லாததால் தொடர் விபத்து

சின்னசேலம்:  விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையில் பெரியார், மேகம், எட்டியாறு, செருக்கல் போன்ற நீர் வீழ்ச்சிகள் உள்ளது. இதில் பெரியார், மேகம் நீர்வீழ்ச்சிகள் மட்டும் சுற்றுலா பயணிகள் விரும்பும் இடமாக உள்ளது.  அதிலும் மேகம் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க செல்ல வேண்டுமானால் நீண்டதூரம் ஒற்றையடி பாதையில் நடந்து செல்ல வேண்டும். இதனால் மேகம் நீர்வீழ்ச்சிக்கு பெரும்பாலும் வாலிபர்கள் கூட்டமே செல்லும். ஆனால் பெரியார் நீர்வீழ்ச்சி வெள்ளிமலை சாலையின் ஓரத்திலேயே உள்ளதால், இந்த நீர்வீழ்ச்சிக்குத்தான் புதுவை, கடலூர் போன்ற வெளியிடங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் கார், பஸ் போன்ற வாகனங்களில் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

Advertising
Advertising

தற்போது நடந்து முடிந்த பொங்கல் பண்டிகையையொட்டி பெரியார் நீர்வீழ்ச்சிக்கு மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து குளித்து சென்றனர். அதைப்போல நேற்று விடுமுறை நாள் என்பதால் பெரியார் நீர்வீழ்ச்சிக்கு கார், வேன்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களில் பெரியார் நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரிக்கும்போது மக்கள் கூட்டம் இருக்கும். சிறுவர்கள், பெண்கள், வாலிபர்கள் என ஏராளமானோர் குளிக்க வருகின்றனர்.

குளிக்க வரும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் நீர் ஊற்றும் இடத்தில் போதிய அளவு தடுப்பு கம்பிகள் இல்லாததால் குளிக்கும்போது தடுமாறி கீழே விழுகின்றனர். அவ்வாறு விழும்போது மண்டையில் அடிபட்டு காயம் ஏற்படுகிறது. அதனால் பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிக்குமிடத்தில் இரும்பு குழாய்களால் ஆன தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: