வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

சேலம், மார்ச் 28:சேலத்தில் வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கோவை மண்டல எஸ்பி பாலாஜி மேற்பார்வையில், சேலம் எஸ்ஐ பெரியசாமி மற்றும் போலீசார் நேற்று பள்ளப்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்து கண்டறியப்பட்டது.

உடனே அங்கு பதுக்கி வைக்கப்பட்டிரு்த 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த  போலீசார், பதுக்கிய வாலிபரை பிடித்து விசாரித்தனர்.அதில், அவர் பள்ளப்பட்டியை சேர்ந்த தீலிப்குமார்(23) என்பதும், இவர் அப்பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மாவாக அரைத்து அதிக  விலைக்கு  விற்று வந்தது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து  அவரை கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: