×

தலைமை ஆசிரியர், ஆசிரியரை தாக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது: நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி

திருவள்ளூர்: தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே  கீழநம்பிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் இந்து துவக்க பள்ளியில்  பணியாற்றும் ஆசிரியர் பாரத்தை அடித்து, உதைத்த அப்பள்ளியில் படிக்கும் மாணவன் பிரகதீஸின் தந்தை சிவலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட எஸ்பி. பாலாஜி சரவணன் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார் என்ற செய்தி மிகவும் பாராட்டிற்கு உரியது, வரவேற்க தக்கது.

மாணவர்கள், ஆசிரியர்களின் நலனில் அக்கறை கொண்டு இந்த நடவடிக்கை எடுத்திருப்பது வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவம் இனி நடக்காது என்பதற்கான முன்னோட்டமாக கருதுகிறோம். நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்து  ஆசிரியர் மாணவர் நலன்காக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : Headmaster ,Chief Minister ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!