×

பைக் மோதி விவசாயி காயம்

ஏழாயிரம்பண்ணை: வெம்பக்கோட்டை அருகே பைக் மோதியதில் விவசாயி காயமடைந்தார். வெம்பக்கோட்டை பகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் அருகேயுள்ள கொங்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி(65). விவசாயியான இவர், நேற்று காலை தனது தோட்டத்திற்கு செல்வதற்காக கொங்கன்குளம்- ஆலங்குளம் சாலை வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பின்னால் சென்ற அச்சம்தவிழ்த்தான் பகுதியைச் சேர்ந்த பெருமாள்சாமி மகன் விஜயகுமார் ஓட்டிவந்த பைக் அவர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி குருசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு