×

கல்லூரி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி போட்டிகள்

ராஜபாளையம்: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி, ராஜபாளையம் கிங்ஸ் ரோட்டரி கிளப் சார்பில் அனைத்து கல்லூரிகளுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் குமாரராஜா வரவேற்று பேசினார். ரோட்டரி சங்க செயலாளர் வியாஸ் பங்கேற்றார். கலை நிகழ்ச்சி திட்ட அறிக்கை குறித்து வெங்கடராஜா பெருமாள் எடுத்துரைத்தார். விழாவில் காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனர் சண்முகநடராஜ் சிறப்புரையாற்றினார். ராமநாதபுரம் ரோட்டரி சங்க வருங்கால தலைவர் காந்தி சிறப்புரையாற்றியதோடு, பெண் ஆட்டோ ஓட்டுநர் தனலட்சுமி, தெருவோர நாய்களை பாதுகாக்கும் அனிதா ஆகிய இருவருக்கும் ஊக்கத்தொகையும், தன்ராம் என்ற மாணவருக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கினார்.

போட்டிகளில் முதல் இடத்தை அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவர்கள் தட்டிச் சென்றனர். நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர்  லட்சுமி, ரோட்டராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் கோபி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். ராஜூக்கள் கல்லூரி பொன்விழா ஆண்டு ஒருங்கிணைப்பாளர் ஜெகநாத் நன்றி கூறினார். நிகழ்ச்சியை பேராசிரியை கலாவதி தொகுத்து வழங்கினார்.


Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு