×

அரசு பள்ளியில் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் நிகழ்ச்சி

தொண்டி, மார்ச் 21: தொண்டி அருகே எம்.வி.பட்டினம் அரசுப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் நிகழ்வு எம்.வி.பட்டினம் நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. கதை பாட்டு விளையாட்டு செயல்பாடுகள் வாயிலாக குழந்தைகள் வெளிப்படுத்துகின்ற றன்களை வெளிப்படுத்தும் விதமாக எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. இதில் குழந்தைகளின் ஆடல்,பாடல், பேச்சு, நடிப்பு போன்ற தனித் திறன்கள் மற்றும் செயல்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டது.

பொருள் புரிந்து படிக்கவும், எழுதவும், அடிப்படைக் கணித செயல்பாடுகளை செய்யவும் இத்திட்டம் உதவுகிறது. அரும்பு,மொட்டு, மலர் என்று மூன்று நிலைகளில் மாணவர்களை பிரித்து அவர்களின் கற்றல் அடைவு நிலையை வெளிப்படுத்தப்படுகிறது. இக்கூற்றுகள் யாவும் எண்ணும் எழுத்தும் வகுப்பறைகள் சரியான இலக்கு நோக்கி சென்று எடுத்து காட்டுவதற்கு இந்த நிகழ்வு அமைந்தது. இதில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...