×

வறட்சி நிவாரணம் கேட்டு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருவாடானை, மார்ச் 21: திருவாடானையில் வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு நாள் வணிகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பும் நடைபெற்றது. திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கடந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் நெல் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை வட்டார விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் கடையடைப்பு செய்தனர். போராட்டத்தால் பெரும்பான்மையான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டார விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் கூறுகையில், ‘‘கடந்த மாதம் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்க கூட்டத்தில் கோரிக்கை வைத்தோம். அதைத்தொடர்ந்து அதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் இதுவரை நிவாரணம் எதுவும் அறிவிக்கப்பட வில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். அதுவரை காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்’’ என்றனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...